இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,141 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,18,571 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை – 47,56,165

சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை – 9,70,116, இதுவரை மொத்தம் 92,290 பேர் உயிரிழப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.