லண்டன் காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீஸ் அதிகாரி கொலை

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள குரோய்டன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் விண்ட்மில் சாலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.சம்பவத்திற்கு முன் குறித்த சந்தேக நபர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அங்கு போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது தன்னிடமிருந்து ஆயுதத்தை வழங்குவதற்கு முன் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு பின்னர் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு அந்த அதிகாரிக்கு சம்பவ இடத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட அதிகாரி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய 23 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.