சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த எம் பி டி கே சுரேஷ் !!!

பாராளுமன்ற உறுப்பினர் டி கே சுரேஷ் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை செய்துவரும் நிலையில், அவர்களுக்கு திடீரென அதிர்ச்சியை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் தனக்கு கரோனா தோற்று உறுதி ஆகி விட்டதால் நீங்களும் சோதனை செய்து கொள்ளும்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது சகோதரராகிய சிவகுமாருக்கு கரோனா உறுதி ஆகி இருந்தது. அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஆகிய டி கே சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் டி கே சுரேஷ் வீடு மற்றும் அலுவலகங்களிலிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதனை தொடர்ந்து இன்று தனக்கு கரோனா உறுதியாகியுள்ளதாகவும் ஆகையால் என்னுடன் கலந்துரையாடிய சிபிஐ அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நீங்களும் கரோனா டெஸ்ட் செய்து கொள்ளுமாறு இவர் டிவிட் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே கரோனா இவருக்கு உறுதியாகி உள்ளதா அல்லது நடிக்கிறாரா என்பது குறித்து கேள்விக்குறியாக உள்ளது இருப்பினும் அதிகாரிகள் தற்பொழுது அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.