ஓடிடி தளத்தில் வெளியான பாலாவின் ’வர்மா’ திரைப்படம்!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘வர்மா’. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கினார். ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், இத்திரைப்படம் தங்களுக்கு முழுமையான திருப்தியளிக்கவில்லை என்றும், இது ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக் போன்று இல்லை என்றும் கூறி தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிட்டது.

இதையடுத்து மீண்டும் துருவ்வை வைத்து இத்திரைப்படத்தை கிரிசாயா, ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் இயக்கி கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். இருப்பினும், பலரும் பாலாவின் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பாலா இயக்கியுள்ள ’வர்மா’ திரைப்படம் இன்று(அக்.06) சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் ’வர்மா’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் படம் பார்த்தவர்கள் பலரும் இது பாலாவின் படம்தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.