சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியான அல் பாப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

பேருந்து நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.