பிசிஆர் சோதனை நெகட்டிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தமில்லை..!

பிசிஆர் நெகட்டிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தமில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிசிஆர் நெகடிவ் வந்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்யலாம். அந்த வகையான நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக அரசு மருத்துவமனைகளில் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை சரியாக செய்தால் மட்டுமே தொற்றை உறுதி செய்ய முடியும்.

பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் மூக்கின் உள் அந்த குச்சி இருக்க வேண்டும், மாதிரி எடுக்கப்படுபவருக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினால்தான் சரியாக மாதிரி எடுக்கப்பட்டதாக அர்த்தம். சில நேரங்களில் மாதிரிகளை ஆய்வகத்துக்கு சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நெகடிவ் காட்டலாம்.

இருமல் சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு முன்பே சிடி ஸ்கேன் செய்துகொள்ளலாம் என்று கூறும் நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராமன், பத்தே நிமிடங்களில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு பாதிப்பு என்றும் தெரிந்துகொள்ளலாம். 40க்கு பூஜ்ஜியம் என்றால் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 40க்கு 20 என்றால் 50% பாதிப்பு என்று அர்த்தம் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here