கர்நாடக மாநிலம் உடுப்பியில் 38 ஆண்டிற்க்கு பின் வரலாறு காணாத பலத்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் அறிவிப்பு

பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்களை அலைத்து செல்ல கோரி மாநில முதல்வர் எடியூரப்பா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது கர்நாடக மாநிலம் உடுப்பி மங்களூர் சிக்கமகளூர் போன்ற பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக உடுப்பி மாவட்டத்தில் சுமார் 2,500 பேர் வரை இதுவரை தாள்வான பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மத்திய பாதுகாப்பு படை மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல உடுப்பி டவுனில் கிருஷ்ணர் கோயிலுக்கும் தற்போது மழை வெள்ளம் சூழம் நிலை ஏற்பட்டுள்ளது உடுப்பியில் இருந்து மங்களூர் செல்ல கூடிய சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது அதேபோல உடுப்பியிலிருந்து சிக்கமகளுறு மணிப்பால் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய இடைப்பட்ட பகுதியில் கூடுதலாக சாலை சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில 3 ஹெலிகாப்டர்கள் மூலம் மத்திய ஆயுதப்படையினர் மக்களை மீட்கும் வேலைப்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அது மட்டுமல்லாது பல இடங்களில் பள்ளமான பகுதிகளில் வீடுகளில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மத்திய பாதுகாப்பு படையினர் மீட்டு வருகின்றனர் அதேபோல உடுப்பி சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா மக்களின் பாதுகாப்புக்காக என்ன அத்தியாவசிய தேவை உள்ளதோ அதை உடனடியாக பெற்றுக் கொண்டு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு உத்திரவு விடுத்துள்ளார்.

தற்போது உடுப்பியில் மீண்டும் 2 நாட்களுக்கு மழை கூடுதலாக இருக்கும் என்பதால் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிற்க்கு கபினி கிருஷ்ணராஜசாகரா அனையில் இருந்து கூடுதலாக தண்ணிர் திறந்துவிடபட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here