விவசாயிகளுக்கு நல்லது செய்யவே நாங்கள்- பிரதமர்

விவசாயிகளுக்கு நல்லது செய்யவே நாங்கள் இருக்கிறோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் மசோதாக்களும் மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை ஆகியவை தொடரும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம். அவர்களை ஆதரிப்பதற்கும் அவர்களின் தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.