10 நாள்களுக்குப் பின் பெரும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தை!

கடந்த 10 நாள்களாக ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை, இன்று பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று (அக்.14) வர்த்தகமானதைவிட சுமார் 16 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன் பின்னர் பங்குச்சந்தை சரிவின் பாதையிலேயே பயணித்தது.

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 1,066 புள்ளிகள் சரிவடைந்து, 39,728 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகள் குறைந்து, 11,680 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.