உலகளவில் 4 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 539 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் மூன்று கோடியே 87 லட்சத்து 52 ஆயிரத்து 973 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்து 962ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 91 லட்சத்து 29 ஆயிரத்து 637ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 81 லட்சத்து 50 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் இரவு நேர ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here