ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட பெண் மிஸ்சிங்..!

ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி என்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெங்களூர் பொம்மனஹள்ளியைச் சேர்ந்த அனுசியா(பெயர் மாற்றம்) என்ற பெண் சென்றுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தபோது அந்த பெண் கடைசியாக தங்கியிருந்த டெல்லி பகுதியிலும் தேடியுள்ளனர் .செல்போனை எடுத்துச் செல்ல ஆம்புலன்சில் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என சொன்னபோது அவர்கள் கேட்கவில்லை.

பாதிப்பின் இரண்டாம் கட்டத்தில் இருப்பதால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள் என்கிறார் அனுஷாவின் மருமகன் ராஜ்குமார்.

பொம்மமனஹள்ளியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அடுத்த நாள் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினர்.

அங்கு சென்று விசாரித்த போது அப்படி ஒரு நோயாளி அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியதும், உடனடியாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் வெளியே சென்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here