அதிமுக வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மற்றற்ற மகிழ்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மற்றற்றமகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை திடலை மேம்படுத்த பூமிபூஜையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கின்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி திட்டத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது வரை 943 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்காக வழங்கவேண்டிய 372 கோடி ரூபாயை விரைவில் முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

புதிய கல்விக்கொள்கையில் மழலையர் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதற்கு முன்பே தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் தமிழ்வழி பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.மேலும் மகாராஷ்டிராவில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளியை மீண்டும் துவங்க முதல்வர் ஆலோசனயின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அவரிடம் நிரூபர்கள் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உங்களது பெயர் இடம் பெறவில்லையே என்ற கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மற்றற்ற மகிழ்ச்சி. இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here