2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீட்டர் உயரும்

2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாசா நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவது அதிகரிக்கும் என்றும் இதனால் 2100 ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38சென்டி மீட்டர் அதிகமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல்மட்ட உயர்வு அடுத்த 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும், அண்டார்டிகாவில் 3 முதல் 25 சென்டிமீட்டர் வரை கடல் மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.