போதைப்பொருள் வழக்கில் மறைந்த முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராய் கைது

கர்நாடக மாநில நிழல் உலக தாதாவும் கன் னட அமைப்பைச் சேர்ந்த தலைவருமாகிய மறைந்த முத்தப்பா ராபின் மகன் ரிக்கி ராய் இன்று சிசிபி போலீசாரால் பெங்களூர் பிடுதி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் சம்பந்தமாக டிரக் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பது சம்பந்தமாக இவருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்து இவருக்கு சொந்தமான ராம்நகரில் உள்ள பிடுதி பகுதியில் உள்ள வீட்டில் அவரை கைது செய்தனர்.

அதேபோல பெங்களூரிலுள்ள வையாளி காவல் என்னும் கிராமத்தில் இருந்த இவரது பண்ணை வீட்டிலும் சிசிபி போலீசார் இவரை கைது செய்து அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இவரை மைசூர் வழியாக மங்களூர் இருக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக சிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.