தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறத

  • தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்ப
  • அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
  • 100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது
  • நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு
  • மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்
  • எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன
  • மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
  • மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம்
  • வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்
  • மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன
  • காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை
    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here