மார்க் ஷீட்டால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கவே புதிய கல்விக் கொள்கை – பிரதமர் மோடி

புதிய கல்விக்கொள்கை என்பது புதிய இந்தியாவின் புதிய ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வழி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் பள்ளிப்படிப்பு என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அனைவரும் இதனை இணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை 15 லட்சம் பேர் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளதாகவும், இந்த கருத்துகள் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த உதவும் என்றும் மோடி கூறியுள்ளார். கடந்த 4-5 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரின் கடின உழைப்பால் தேசிய கல்விக்கொள்கை உருவாகியுள்ளதாகவும், இது முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மழலையர் படிப்பு என்பது குழந்தையின் முதல் வெளியுலக அனுபவம் என்று கூறியுள்ள மோடி,செயல்சார்ந்த கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த கல்வியை புகட்ட குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டில் புதிய பாதையை வகுத்து கொடுக்கும் எனக் கூறிய பிரதமர் மோடி, அது சிறப்பாக அமலாவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்..
மாணவர்களுக்கு மார்க் ஷீட் என்பது நெருக்கடியாகவும், பெற்றோருக்கு கவுரமாகவும் மாறிவிட்டதாகக் கூறிய கூறிய பிரதமர் மோடி, அந்த நெருக்கடியை தவிர்ப்பதே கல்விக் கொள்கையின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here