செப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம்

50-per-cent-reservation-for-government-doctors-in-super-specialty-medical-courses-supreme-court
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு

வங்கிக் கடன் ஒத்திவைப்பு காலகட்டத்தில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கியுடனும் மற்ற வங்கிகளுடனும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க மத்திய அரசின் சொலிசிட்டர் அவகாசம் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வங்கி கடன் மாத தவணை செலுத்த அவகாசம் வழங்கிய மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவது தொடர்பாக இரண்டு வாரத்தில் மத்திய அரசு திடமான ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதுவரை கடன் தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவிட்டு வழக்கை செப் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here