Wants To End Ukraine War: எங்களின் இலக்கு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ரஷ்ய அதிர் புதின் பேச்சு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா (Wants To End Ukraine War) தொடுத்து 10 மாதங்களை கடந்துள்ள நிலையில் இப்போரில் உக்ரைன், ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகளும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

போரை நிறுத்துவதற்கு பல்வேறு உலக நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தாமல் தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போரால் உக்ரைனில் பல லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதே நேரத்தில் அங்கு படித்து வந்த இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விட்டு சொந்த நாடுகள் திரும்பியதை பார்த்திருப்போம்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி போருக்கு பின்னர் முதன் முறையாக டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றுள்ளார். ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது குடும்பத்தாருடன் வரவேற்று வெள்ளை மாளிகைக்கு அழைத்து சென்றார். அங்கு இரண்டு நாட்டு தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். உக்ரைனுக்கு பல்வேறு ஆயுதங்களையும், போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் நேரடியாக அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் சென்றிருப்பது உலக நாட்டு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆயுதப் பற்றாக்குறை காரணமாக ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது. ஏற்கனவே போர் நெருக்கடியால் உக்ரைன் அரசு நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது, இதனால் அமெரிக்கா அதிகளவிலான உதவிகள் செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. அதன்படி சுமார் ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்கா உதவிகளை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது, நீங்கள் கொடுக்கும் நிதியுதவியை வெறும் தானம் என்று நினைக்காதீர்கள். இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம். தற்போதைய நிலையில் உக்ரைன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறோம்.

அதிபர் பைடன் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருபோதும் ரஷ்யாவிடம் நாங்கள் சரணடைய மாட்டோம் என்று ஜெலன்ஸ்கி பெருமையாக கூறினார். இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: ரஷ்யாவை பலவீனமாக்க அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க்களமாக பயன்படுத்தி வருகிறது. எங்களின் ஒரே இலக்கு, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதான். இதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளை எடுக்கிறோம். விரைவில் இந்த போர் முடிவடையும் என்பதையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஒரு வழியாக போர் முடிவுற்று அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்தாலே போதும் என்று உலக நாடுகள் விரும்புகிறது.