No Special Class: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: பள்ளி, மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் (No Special Class) இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் பல மாணவர்கள் விடுமுறை நாட்களில் நிம்மதியாக இருக்க விடாமல் பள்ளிக்கு வரவழைத்து அவர்களின் நிம்மதியை கெடுக்கும் வேலையில் பல தனியார் பள்ளிகள் இருப்பதை நாம் அறிவோம். அதே போன்று ஒரு சில அரசு பள்ளிகளிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

இது போன்று நடைபெறும் சமயங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இது போன்ற சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகளும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தி வந்தது.

இதனை தொடர்ந்து விடுமுறை தினங்களில் எவ்வித வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக இந்த தகவலை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Sasikala Pushpa House Attack: பா.ஜ. துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல்: தி.மு.க. கவுன்சிலர்கள் மீது வழக்கு

முந்தைய செய்தியை பார்க்க:Train Service Stop Pampan Bridge: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை திடீர் நிறுத்தம்