Turkey Syria Earthquake: சிரியா நிலநடுக்கத்தில் போராடி தம்பியை பாதுகாத்த சிறுமி; இணையத்தில் வைரல்

அங்காரா: Photos of a girl fighting to protect her younger brother during Monday’s earthquake in Syria have gone viral on the internet. சிரியாவில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் போராடி தம்பியை பாதுகாத்த சிறுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கத்தால் இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அங்காரா, துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் திங்களன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் 7வயது சிறுமி மற்றும் அவரது தம்பியும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சிறுமியின் மேல் இடிந்த கட்டடங்களின் கற்களும், சுவர்களும் சரிந்து விழுந்த நிலையில் அவர் தனது ஒரு கையால் தனது தம்பியின் தலையில் கை வைத்து அவனுக்கு காயங்கள் ஏற்படாதாவாறு கிட்டத்தட்ட 17 மணி நேரமாக பார்த்துக் கொண்டார்.

மீட்புக் குழுக்கள் அந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர். தம்பியை 17மணி நேரம் போராடி பாதுகாத்த 7வயது சிறுமியின் புகைப்படத்தை ஐநா.,வுக்கான பிரதிநிதிக்குழுவின் முஹம்மது சஃபா பதிவிட்டுள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாக பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.