Erode by election polls: ஈரோடு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை

ஈரோடு: The Election Commission has banned publication of poll results in Erode East by-election. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஈரோடு தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவு வரும் 27-ந் தேதி நடைபெறும் நிலையில், பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். மேலும், வாக்குப்பதிவு முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்றும் அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடையை மீறி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் சத்யபிரதா சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.