Students hanging bus steps:: திருவண்ணாமலை அருகே பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அவதி

திருவண்ணாமலை: In Kannamangalam area near Thiruvannamalai, students are suffering due to lack of adequate bus facilities. திருவண்ணாமலை அருகே கண்ணமங்கலம் பகுதியில் போதிய பேருந்து வசதியின்றி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் மற்றும் கொங்கராம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்தும் தினமும் பள்ளி கல்லூரி பயில வேலூருக்கு காலையில் செல்வதும் பின்னர் மாலையில் வீடு திரும்புவார்கள்.

இந்த நிலையில், அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும் கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் செல்லும் நகர பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் தினமும் பயணித்து வருகின்றனர்.

இதனால் தங்களுடைய பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது இப்படி பயணிப்பதை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் தினமும் வீடு திரும்புவதற்குள் வயிற்றில் புளியை கரைத்தால் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும், கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் பள்ளி கல்லூரி வேலைகளில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வியின் நலனுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் அரசு நடவடிக்கை எடுத்து போக்குவரத்து துறை கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்களை காணும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.