Today is World Lion Day : இன்று உலக சிங்க தினம்

சிங்கங்கள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை வாழும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுள்காலம் 12 ஆண்டுகளும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுள்காலம் 16 ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது

world lions day

Today is World Lion Day : பல்வேறு கொண்டாட்டங்களை கொண்டாடுவது மனித இயல்பில் உள்ளது, எனவே ஏன் ‘காட்டின் ராஜா’ எனக் கூறப்படும் சிங்கத்தின் தினத்தைக் கொண்டாடக்கூடாது. காடுகளின் அரசனை உலக சிங்க தினமாக நாம் கொண்டாடும் நாள் ஆகஸ்ட் 10 ஆகும். சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும், அவற்றின் பாதுகாப்பை நோக்கிப் பாடுபட வேண்டிய அவசரத் தேவையையும் இந்த நாளின் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கங்கள் உலகம் முழுவதும் அழிந்து போகும் அபாயத்தில் அமைதியாக உள்ளன. ஆனால் சிங்கம் இதைப் பற்றி எப்போதும் கவலைபடுவதுமில்லை. கண்டு கொள்வதுமில்லை.

சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா (Africa, Asia, Europe) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிங்கங்கள் நட்புடன் அலைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது நிலைமை நிறைய மாறிவிட்டது, இதன் விளைவாக சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து 50 ஆண்டுகளாக, உலக சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் 95 சதம் குறைந்துள்ளது, அதன் பாதுகாப்பை நோக்கி பாடுபட‌ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உலக சிங்க தினம் வலியுறுத்துகிறது.

சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த காட்டு விலங்கு (A wild animal of the mammal type) ஆகும். இவ்விலங்கு மாமிசத்தை உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க் காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி (Deer, buffalo, zebra, pig) முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகளான ஓநாய், கழுதைப் புலி முதலானவை எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தம் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும், இதுதான் தனது எல்லை என, மற்றைய சிங்கங்களுக்கும் பெரிய வகை மாமிச உண்ணும் விலங்குகளுக்கு தெரிவிக்கிறது. அது போன்று இருக்கையில் அருகில் இரை வந்தாலும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990 களில் சிங்கங்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருந்ததாகவும் (The number of lions was 1 lakh), தற்போது ஏறத்தாழ 30 ஆயிரம் வரை உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கங்கள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை வாழும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுள்காலம் 12 ஆண்டுகளும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுள்காலம் 16 ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது