Chess Olympiad tournament : செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு

சென்னை: Chess Olympiad tournament is over in mamallapuranm : மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பரிசளித்தனர்.

தமிழக அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (Government of Tamil Nadu, International Chess Federation) ஆகியவை இணைந்து ரூ. 100 கோடி செலவில் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்து நடத்தின. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான நேற்று 11 -வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவில் உஸ்பெஸ்கித்தான் தங்கத்தையும், ஆர்மினியா வெள்ளியையும், இந்தியா பி அணி வெண்கலத்தையும் வென்றன. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப்பதக்கத்தையும், ஜார்ஜியா வெள்ளி பதக்கத்தையும், இந்திய எ அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரீன், ரௌனக் சத்வானி (Adhiban, Gukesh, Pragnananda, Nihal Sareen, Raunak Sadwani) இடம்பெற்றிருந்தனர். இந்திய மகளிர் ஏ அணியில் ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, பக்தி குல்கர்னி, தான்யா சச்தேவ் (Harika Dronavalli, Koneru Hampi, R. Vaishali, Bhakti Kulkarni, Tanya Sachdev) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஹரிகா துரோணவல்லி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் பங்கு பெற்று 2 அணிகளுக்கும் வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தனிநபர் பதக்கங்களில் டி, குகேஷ், நிஹால் சரீன் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்திய ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகைசிக்கு வெள்ளி பதக்கமும், இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் தான்யா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆர். வைஷாலி ஆகியோருக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிடே தலைவர் அர்காட்சி வோர்கோவிச், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பதக்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். 44-வது ஒலிம்பியாட் போட்டியில் மொத்தமாக 17 இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர் (total of 17 Indians have won medals in the 44th Olympiad). இதில் 2 பேருக்கு தனிநபர் தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கம், 4 வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது என பல்வேறு அணியினர் பாராட்டு தெரிவித்தனர். போட்டியையொட்டி தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒலிம்பியாடையொட்டி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிடேயின் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி, சிறப்பாக நடைபெற்று, வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது மாநில அரசுக்கு மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.