Nitish Kumar: நிதிஷ்குமார் இன்று முதல்வராக பதவி ஏற்பு: துணை முதல்வராக தேஜஸ்வி பதவி ஏற்கிறார்

Image credit: Twitter.

பாட்னா: Nitish Kumar takes oath as Chief Minister today : பீகாரின் 8 வது முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் துணை முதல்வராக லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பீகார் மாநிலத்தில் லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்று புதிய ஆட்சியை அமைக்கிறது. ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்திருந்த நிதிஷ்குமார், அவரது கட்சியின் எம்பியும், மத்திய அமைச்சருமான ஆர் எஸ்பி சிங்கை ஆபரேஷன் கமலா மூலம் தூண்டி விட்டி பாஜக ஆட்சியை பிடிக்க முயல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நேற்று பாஜகவுடன் இருந்த கூட்டணி முறித்துக் கொண்டார். அதனையடுத்து அம்மாநில ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார். முதல்வர் பதவிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடந்து தேஜஸ்வி பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், நிதிஷ்குமார் முதல்வராகவும், அவரை துணை முதல்வர் ஆக்குவது எனவும் முடிவான. இதனையடுத்து, புதன்கிழமை மாநிலத்தின் 8 வது முதல்வராக நிதிகுமார் பதவி ஏற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து தேஜஸ்வி துணை முதல்ராக பதவி ஏற்க உள்ளார் (Tejaswi is set to take charge as Deputy Chief Minister). ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட 164 எம் எல் ஏக்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் (Around 2 pm)பீகாரின் முதல்வராக நீதிஷ்குமார் பதவி ஏற்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பாகு சௌஹான் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஏற்கெனவே ராஷ்ட்ரியா ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார், பின்னர் லாலு பிரசாத் மீது எழுந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து, 2017-ஆம் ஆண்டு அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி பீகாரில் ஆட்சியை பிடித்தார். தற்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார். இந்த கூட்டணி குறித்து அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜேஸ்வால் கூறியது: 2020 ஆம் ஆண்டு பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் அதனை மீறி நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளதை மக்கள் ஏற்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை பாஜக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதன் காரணமாக அவர் பாஜக கூட்டணிலிருந்து விலகி உள்ளார் என்றார்.

நிதிஷ்குமாரும், 2017-ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (Rashtriya Janata Dal) கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இனி பழையவகைளை மறந்து, மாநிலத்தின் நலனிற்காக அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி பதவி ஏற்க உள்ளனர். பின்னர் இரண்டு கட்சிகளின் சார்பில் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். மகாராஷ்டிரத்தில் பாஜக சிவசேனையை கட்சியை உடைத்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பீகாரில் அக்கட்சியின் கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன், நிதிஷ்குமார் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது. இதனால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.