Thai Navi Ships Sinks: தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது: 106 வீரர்களின் கதி என்ன

பாங்காக்: தாய்லாந்து நாட்டுக்கு சொந்தமான (Thai Navi Ships Sinks) போர் கப்பல் நேற்று (டிசம்பர் 18) நள்ளிரவில் தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அந்த போர் கப்பலில் கடற்படையை சேர்ந்த 106 வீரர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென்று வீசிய புயல் காத்து பயங்கரமாக வீசியது. இதனால் கப்பல் உள்ளே கடல் புகுந்துள்ளது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கப்பலில் புகுந்த நீரை வெளியேற்ற ஊழியர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் மின்சாரம் தடை பட்டதால் கடல் நீரை வெளியேற்ற முடியாமல் வீரர்கள் திண்டாடினர். இதனால் ஒரு கட்டத்திற்கு கப்பல் கடலில் மூழ்கத் துவங்கியதால் வீரர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

இது பற்றிய தகவல் மற்ற ரோந்து கப்பலுக்கு கிடைத்ததால் அங்கு சென்ற மீட்புப்பணியில் மற்ற வீரர்கள் ஈடுபட்டனர். அதன்படி போர் கப்பலில் பயணம் செய்த 75 வீரர்கள் மீட்கப்பட்டனர். ஆனாலும் கடலில் மூழ்கிய 31 வீரர்கள் காணவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் எங்கேயாவது கரை ஒதுங்கியிருப்பார்களா அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்களா என்று அவர்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். இருந்தாலும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடைபெறுவதாக அந்நாட்டு கப்பற்படை கூறியுள்ளது. விரைவில் கிடைக்கலாம் என்ற தகவலும் ஒருபுறம் சொல்லப்படுகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Fans Celebrating The Victory Of Argentina Messis Fans: அர்ஜென்டினாவின் வெற்றியை தமிழகத்தில் உள்ள மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாட்டம்

முந்தைய செய்தியை பார்க்க:Customs Building In Chennai With Modern Technology: சென்னையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் சுங்கக் கட்டடம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்