Pondicherry Admk Anbazagan Accusation: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வராமல் இருப்பதற்கு காரணம் நாராயணசாமி: அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வராமல் தடுத்து நிறுத்தியதில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் நாராயணசாமிதான் (Pondicherry Admk Anbazagan Accusation) என்று கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி தற்போது வரையில் யூனியன் பிரதேசமாக உள்ளது. எனவே எந்த ஒரு முடிவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எடுக்க முடியாது. இதனால் மத்திய அரசு அதிகாரிகளின் முடிவை கேட்டுவிட்ட பின்னர் மாநில முதலமைச்சர் ஒரு முடிவை எடுக்கும் நிலை தற்போது வரையில் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அல்லது தற்போது ரங்கசாமி ஆட்சியில் இருந்தாலும் முடிவு எடுப்பதில் தடுமாற்றமே இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்னையில் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலும் மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீதியில் இறங்கி போராட தயாரா என்று நாராயணசாமி கேள்வி எழுப்புகிறார்.

மேலும் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ. புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி உள்ளது. வீதியில் இறங்கி போராடி வேண்டிய அவசியம் என்ன. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில அந்தஸ்துக்காக எத்தனை தடவை வீதியில் இறங்கி போராடியிருக்கிறார். மேலும் புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், நாராயணசாமியும் காரணம். மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது. பிரதமரிடம் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக வலியுறுத்தினாலே போதுமானது. தனிப்பட்ட காரணத்திற்காக நாராயணசாமி இவ்வாறு கூறி வருகிறார். இவ்வாறு அன்பழகன் குற்றச்சாட்டினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Thai Navi Ships Sinks: தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது: 106 வீரர்களின் கதி என்ன

முந்தைய செய்தியை பார்க்க:சீனாவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பு: பெய்ஜிங்கில் லாக்டவுன்