Cant Sleep Peacefully Due To Sound Of Chickens Crowing: அதிகாலையில் கூவும் கோழியால் தூக்கம் போச்சு: ஐ.டி. ஊழியர் காவல் நிலையத்தில் புகார்

பெங்களூரு: இதுவரைக்கும் நகை, (Cant Sleep Peacefully Due To Sound Of Chickens Crowing) பணம் திருட்டு, அல்லது சொத்துப் பிரச்சனை, மோசடி, வழிப்படி, அடிதடி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் வீடுகளில் நாய், பூனை, பறவைகள் வளர்ப்பது என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் வளர்ப்பு பிராணியால் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் தகராறு வந்துள்ளது.

இதற்கு முன்னர் வளர்ப்பு நாய் பக்கத்து வீடுகளில் அசுத்தம் செய்ததாக சண்டை ஏற்பட்டுள்ளதையும், அதனால் விஷம் வைத்து நாய்களை கொன்றதையும் பார்த்திருப்போம். இதற்காக பெங்களூருவில் புகார் கொடுக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் கோழி அதிகாலை நேரங்களில் கொக்.. கொக்.. கொக்கரோ என்று கூவுவதாலும், வாத்துக்கள் பக்.. பக்.. பக்.. என்ற சத்தம் போடுவதாலும் தன்னுடைய குழந்தையின் தூக்கம் மட்டுமின்றி குடும்பத்தாரின் தூக்கமும் கலைந்து போய்விடுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர்கள் யார் என்று பார்ப்போம், பெங்களூரு கே.ஜி.நகர் 8வது பேஸ் பகுதியை சேந்த ஒரு ஐ.டி. ஊழியர் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவரது வீட்டின் அருகே ரவி என்பவர் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய வீட்டில் கோழிகள், வாத்துக்களை வளர்த்து வருகிறார். இதனால் பகல், இரவு என்று பாராமல் கோழி மற்றும் வாத்துக்கள் கூவிக்கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகாலை நேரங்களில் அடிக்கடி கூவுவதால் ஐ.டி.ஊழியரின் குழந்தை தூங்காமல் அழுதுகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவியிடம் பலமுறை ஐ.டி.ஊழியர் தம்பதியினர் புகாராக கூறியிருக்கிறது. ஆனால் அதனை ரவி கண்டுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், தனது வீட்டின் அருகாமையில் கோழி, வாத்துக்கள் வளர்ப்பவரால் தங்களின் குடும்பத்தாரின் தூக்கம் போய் விட்டது என்ற புகாரை பெங்களூரு மாநகர போலீசாருக்கு ட்விட்டர் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஐ.டி.ஊழியர். அதிலும் வீட்டின் அருகாமையில் கோழி, வாத்துக்கள் கூவும் சத்தத்தை வீடியோவாக பதிவு செய்து இணைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து மாநகர போலீசார் தலகட்டபுரா காவல் நிலையத்திற்கு புகாரை விசாரிக்கும்படி உத்தரவிட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியிடம் மற்றும் ஐ.டி.ஊழியரிடம் விசாரணை நடத்தினர். மேலும், ரவியிடம் அருகாமையில் இருப்பவர்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் கோழி, வாத்துக்களை வளர்க்குமாறு அறிவுறுத்திவிட்டு போலீசார் சென்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Customs Building In Chennai With Modern Technology: சென்னையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் சுங்கக் கட்டடம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

முந்தைய செய்தியை பார்க்க:Auto driver commits suicide: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை