Customs Building In Chennai With Modern Technology: சென்னையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் சுங்கக் கட்டடம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுங்கக் கட்டடம் (Customs Building In Chennai With Modern Technology) கட்டப்பட இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் அமைந்திருக்கும் சுங்க இல்லத்தில் வைகை என்ற புதிய அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதன் பின்னர் அவர் பேசியதாவது: வர்த்தகத்துறையில் நாடு மிகவும் முன்னேற்றம் அடைவதற்கு சுங்கத்துறையின் பங்கு மிகப்பெரியது. எனவே சென்னையில் நவீன முறையில் கட்டப்படும் சுங்கக் கட்டடம் பணியாளர்கள் எளிமையான முறையில் பயன்படுத்துகின்ற வகையில் கட்ட இருக்கிறது.

மேலும், தமிழகத்தில் முன்யோசனையுடன் இது போன்ற அலுவலக கட்டடம் கட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அதே போன்று புதியதாக கட்டப்படும் வைகை வளாகம் மற்ற கட்டடங்களுக்கு ஒரு முன் மாதிரியாக திகழும் என்று கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Dubai Police honourd : 2.7 மில்லியன் திர்ஹம்களை கொள்ளை முயற்சியை முறியடித்து, கொள்ளையனை கைது செய்ய உதவியதற்காக‌ இந்தியருக்கு துபாய் காவல்துறை மரியாதை

முந்தைய செய்தியை பார்க்க:Fans Celebrating The Victory Of Argentina Messis Fans: அர்ஜென்டினாவின் வெற்றியை தமிழகத்தில் உள்ள மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாட்டம்