Gotabaya Rajapatse : சிங்கப்பூரில் கோத்தபய ராஜபட்சே தங்குவதற்கு கடும் எதிர்ப்பு

File Photo.

சிங்கப்பூர்: Strong oppose in Singapore for Gotabaya Rajapatse : சிங்கப்பூரில் முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அண்மையில் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அந்நாட்டிலிருந்து கோத்தபய ராஜபட்சே மாலத்தீவிற்கு (Maldives) தப்பிச் சென்றார். அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூருக்கு சென்றார்.

சிங்கப்பூரிலும் (Singapore) கோத்தபய ராஜபட்சே தங்குவதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற‌னர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலதிபர் ரேமண்ட் என்பவர் இணைய தள மனுவை உருவாக்கியுள்ளார். இது மட்டுமின்றி அவர் கோத்தபய ராஜபட்சே மீது பண மோசடி புகாரும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரேமண்டின் இணைய தள மனுவிற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதோடு சிங்கப்பூரில் பிரபு ராமசந்திரன் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் கடந்த சனிக்கிழமை (Last Saturday) கோத்தபய ராஜபட்சேவை சிங்கப்பூரில் தங்க அனுமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் அங்குள்ள பூங்காவில் போராட்டம் நடத்தினர்.

கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூரில் தங்கி உள்ளதற்கு, இலங்கை மக்களும் தொடர்ந்து சுட்டுரையில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிங்கப்பூரில் யாரும் சட்டத்தை மீறி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அந்நாட்டு போலீஸார் (Police) எச்சரித்துள்ளனர்.

இதனிடையே சிங்கப்பூரில் தனது தனிப்பட்ட பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு, புறப்படுமாறு சிங்கப்பூரிலிருந்து கிளம்புமாறு, கோத்தபய ராஜபட்சேவிடம் அந்நாட்டு அரசு (Singapore Government) கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.