TN Electricity Bill: மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: Electricity tariff Increase: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்சார‌ கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி (Electricity Minister Senthil Balaji) நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தின் வருவாய் மற்றும் கடன் சுமைகளை கருத்தில்கொண்டு கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின் மின் கட்டணத்தை (Electricity Bill) உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டார்.

அதன்படி, வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்த மின் கட்டணத்திலும், 100 யூனிட் இலவச மின்சாரத்திலும் (Free Electrictiy) மாற்றம் இல்லை எனவும், நிலைக் கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் வீட்டு நுகர்வோர் 2.37 கோடி பேர் பயனைவர்.

தற்போது வரை வீட்டு உபயோகத்திற்கான (Electricity Usage) 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மின் கட்டணமாக ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. 500லிருந்து 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும்போது 58.10 சதவீதம் அதிகரித்து ரூ.1.786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றியதாகவும், அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.