மண்டியா : Krs and Kabini dams are full : கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை பாகினா பூஜை செய்ய உள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்புபகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. குடகு மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருவதாக் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணை முழு கொள்ளவை திங்கள்கிழமை மாலை எட்டியது. நீர்வரத்து திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 73,800 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 52,325 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதே போல மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை வட்டத்தில் கபிலா நதிக்குகுறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நொடிக்கு 22,630 கன அடியாக நீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 2284 அடியை தொட்டுள்ளது. கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரளமாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால், அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, அணையில் இருந்து நொடிக்கு 33,313 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணை நிரம்பியதை தொடர்ந்து, புதன்கிழமை சிறப்பு ஹெலிகாப்டரில் மைசூருக்கு வரும் முதல்வர் பசவராஜ் பொம்மை, அங்கிருந்து அணைக்கு கார் மூலம் சென்று, பிற்பகல் 12.10 மணியளவில் பாகினா (சிறப்புபூஜை) (CM Basavaraj bommai doing Bhagina on Wednesday) செய்து வழிபடுகிறார். இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



