Sri Lankan soldiers patrol : இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: தலைநகர் கொழும்பில் ராணுவ வீரர்கள் கவச வாகனத்தில் ரோந்து

அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு: armored vehicles in Colombo : இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் ராணுவ வீரர்கள் கவச வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரின் அலுவலகங்களை முற்றுக்கையிட்டு கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடனம் (Declaration of Emergency) செய்யப்பட்டது. இதனையடுத்து வியாழக்கிழமை கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை மீட்டெடுக்க (To restore the law and order problem) ராணுவத்தினருக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரம் வழங்கியுள்ளார். இந்நிலையில், தலைநகர் கொழும்பில் கவச வாகனத்தில் நின்றபடி ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.