Petrol, diesel price reduced : மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற‌ மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Chief Minister Eknath Shinde announced : மகாராஷ்டிராவில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 5, டீசல் விலை ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .94 ஆகவும் இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலையை நிர்ணயிக்கும் போது மற்ற கூறுகள் செயல்பாட்டுக்கு வருவதால் சிறிய வேறுபாடுகள் சாத்தியமாகும். என்றாலும் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை (Petrol, diesel price) குறையும் என்ற‌ மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மதிப்புக்கூட்டு வரி (வாட்) குறைப்பால் மாநிலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி செலவாகும், ஆனால் இது ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் குறைக்கும்.

இந்த முடிவானது நிதி சார்ந்தது போலவே அரசியல் ரீதியானது, ஏக்நாத் ஷிண்டே இரண்டு வாரங்களுக்கு முன்பு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைமையில் நடைபெற்று வந்த கூட்டணி அரசில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலைமை ஏற்று மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சியை பிடித்தார். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்று, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த உடனேயே, எரிபொருளின் மீதான வாட் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Deputy Chief Minister Devendra Fadnavis) கூறுகையில், மக்கள் நலனுக்கான சிவசேனா-பாஜக கூட்டணி அரசின் உறுதிப்பாட்டின் இது ஒரு பகுதியாகும் என்றார்.

பெரும்பான்மை எம்எல்ஏக்களைக் கொண்ட தனது அணிதான் உண்மையான‌ சிவசேனா என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகிறார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஒட்டுமொத்த கட்சியல்ல என்று உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். சிவசேனா கட்சியினர் 2 அணியாக பிரிந்துள்ள போதும், சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shindeதலைமையிலான அணியின் கைதான் ஓங்கி உள்ளது.