AIADMK office sealed case : அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பான வழக்கு : நாளை விசாரணை

will-aiadmk-general-body-meeting-be-held-tomorrow

சென்னை : hearing on the petitions in highcourt : அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பான மனுக்கள் மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுலகத்தில் நுழைவது தொடர்பாக‌ எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையை (Law and order problem) கருத்தில் கொண்டு, வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்தினை பூட்டி, சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இருத்தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) மனுக்களை தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காகவும் விசாரிக்க அவர்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தினர்.

இது தொடர்பான மனுக்கள் வியாழக்கிழமை ( Thursday) நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அனைத்து நடைமுறைகளும் முடிந்து விட்டன. எனவே அவசர வழக்காக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வழக்கு தொடர்பான சட்ட சிக்கல்களை விளக்கி, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரது மனுக்களும் முறையாக பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து இருத்தரப்பினரது மனுக்கள் மீதான விசாரணை (Hearing on Petitions) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.