Gotabaya Rajapaksa : மாலத்தீவில் தஞ்சம் புகுந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச

fled to Maldives : அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்த கோத்தபய ராஜபட்ச, அதற்கு முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளது இலங்கை மக்களிடையே மேலும் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது

File Photo.

கொழும்பு: Gotabaya Rajapaksa fled to Maldives : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பிச் சென்று, தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் சில மாதங்களாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச (Gotabaya Rajapaksa) பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டதோடு, அதன் உள்ளே புகுந்தனர்.

இதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜ்பட்ச (Gotabaya Rajapaksa) அந்த மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார். அவர் நாட்டை விட்டே தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை. இலங்கையிலேயே இருப்பதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜூலை 13-ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச (Gotabaya Rajapaksa) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இடைக்கால அதிபராக நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரை நியமிப்பது என முடிவானது.

ஆனால் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் விமானப்படையின் விமானத்தில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்று. தஞ்சம் புகுந்துள்ளதாக‌ தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்த கோத்தபய ராஜபட்ச (Gotabaya Rajapaksa) அதற்கு முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளது இலங்கை மக்களிடையே மேலும் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.