New house collapsed : குடி புகுவதற்கு 6 நாட்களுக்கு முன் மலை மண் சரிந்து புது வீடு இடிந்தது

House collapsed : 3 நாட்களுக்கு முன், வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் குடும்பத்தினர் இதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை

மங்களூரு: New house collapsed due to landslides: வீடு கட்டுவதும், திருமணம் செய்து வைப்பது சாதாரண விஷயமல்ல‌. ஏனென்றால் இரண்டுமே எளிதான வேலைகள் அல்ல. பல ஆண்டுகளாக சேர்த்து வைத்தப் பணம் மட்டுமின்றி, கடன் வாங்கினால்தான் வீடு கட்ட முடியும். ஆனால் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்யா வட்டத்தில் உள்ள பல்லத்தட்கா கிராமத்தில் மலை மண் சரிந்து வீடு இடிந்துள்ளது (house collapsed). கடலோர மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையே இதற்கு காரணம்.

தேஜ்குமார், தாராமதி தம்பதிக்கு சொந்தமான இந்த வீட்டிற்கு, ஜூலை 18-ம் தேதி கிரக‌ பிரவேசம் செய்ய‌ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த‌ன. புதிய வீடு கட்டுவதற்கு தாராமதியும், தேஜ்குமார் தம்பதியினர் லட்சக்கணக்கில் பணம் செலவழித்திருந்தனர்.

3 நாட்களுக்கு முன், வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் குடும்பத்தினர் இதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. விரிசல் விழுந்த சுவர் சரி செய்யப்பட்டது. அதன்பிறகு வீட்டுக்குள் குடிபுகுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. நேற்று மாலை 6:30 மணியளவில், அந்த‌ வீட்டில் இருந்த சகோதரர்கள் பிரஜ்வல், உஜ்வல் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென மலை மண் சரிந்ததால், வீட்டின் 3 அறைகள் மண்ணால் மூடப்பட்டன.

வீட்டின் மீது மலை மண் சரிந்து விழுந்ததால், வீடு ஒரு பக்கமாக தரைமட்டமானது (The new house collapsed due to landslides) மட்டுமின்றி, 3 மோட்டார் சைக்கிள்கள் மலை மண் சேற்றில் சிக்கி சேதமடைந்தன. மலை மண் சரிவின் போது வீட்டில் யாரும் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.