Sri Lanka crises : போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பி ஓட்டம்

கொழும்பு: Sri Lanka president Fled : முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனையடுத்து மாளிகையிலிருந்து கோத்தபய ராஜபட்ச தப்பியோடிதாக கூறப்படுகிறது.

தீவு நாட்டின் 22 மில்லியன் மக்கள் பல மாதங்களாக பொருளாதாரம் உள்ளட‌க்கிய வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தை குற்றம் சாட்டி, அவரது பதவியை ராஜிநாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை அதிபரின் மாளிகையைச் சூழ்ந்தனர்.

அதிபர் மாளிகையின் வாயில்களில் கூட்டம் அலைமோதியதும், ராஜபட்சவை பத்திரமாக வெளியேற்றப்படும் வரை போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக மாளிகை வளாகத்தில் பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிபர் ராஜபட்ச பாதுகாப்பாக‌ அழைத்துச் செல்லப்பட்டார் என மாளிகையில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜபட்ச தனது பதவியை இன்னும் ராஜிநாமா செய்யததால், அவர் இன்னும் நாட்டின் அதிபர் என்பதால் அவருக்கு ராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் அதிபர் மாளிகைக்குள் ஆயிர‌க்கணக்கான மக்கள் முற்றுகை இடுவதை காட்டின. கூட்டத்தில் இருந்த‌ சிலர் ஆர்வத்தில் அதிபர் மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் ரணில்சிங்கே பதவி விலகச் சொல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் மறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பின்னர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இடைக்கால அதிபராக மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை ஆக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து, பிரதமர் ரணில்சிங்கேவின் மாளிகையையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட‌ முயன்று வருவதாக கூறப்படுகிறது.