ravindra jadeja :இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சிஎஸ்கே பதிவுகளை நீக்கியுள்ளார் ரவீந்திர ஜடேஜா

CSK: ரவீந்திர ஜடேஜா மே மாதத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடரவில்லை.

தில்லி : ravindra jadeja : ரவீந்திர ஜடேஜா மே மாதத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஐபிஎல் என்றாலே நினைவுக்கு வரும் பிரபல அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸும் இடம்பிடித்துள்ளது. ஆனால் இந்த சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த முறை, ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் சிஎஸ்கேவின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜடேஜா தனது கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தார். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, 2021 மற்றும் 2022 ஐபிஎல் போட்டிகள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கியுள்ளார். இது பல சந்தேகங்களை ஏழுப்பியுள்ளது.

ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க இன்னும் 2 நாட்கள் இருந்த நிலையில், எம்.எஸ்.தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் சிஎஸ்கே கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதன் பிறகு சிஎஸ்கே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 6-இல் தோல்வியடைந்தது. அணியின் மோசமான செயல்பாட்டிற்கு தார்மீக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார். இதன் பின்னர் காயம் காரணமாக ஜடேஜா அணியில் இருந்து விலகினார். சிஎஸ்கே அணி, ஜடேஜாவை அணியில் இருந்து விலக்கிவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது.

இதையடுத்து, மே மாதம் சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ரவீந்திர ஜடேஜா பின் தொடராமல் உள்ளார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக இருக்கும் ஜடேஜாவின் இந்த நடவடிக்கை பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதன் பிறகு சிஎஸ்கேயின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு சமூக ஊடகங்களில் ஜடேஜா, சிஎஸ்கே பதிவுகளை நீக்கியது பற்றி தெரியாது என கூறியுள்ளார். ஆனால் சிஎஸ்கே அணியில் நீடிப்பேன் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அண்மையில் நடைபெற்ற தோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் ஜடேஜா இந்திய அணியின் துணை கேப்டன் ஆனதற்கு சிஎஸ்கே அணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் ஜடேஜா நீக்கியுள்ளதால், ஜடேஜாவுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஏதோ பூடகமாக நடைபெறுவதை மட்டும் ஊகிக்க முடிகிறது.

சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் ஜடேஜா ஏன் நீக்கினார் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. இது அவரது விருப்பம். எங்களது பக்கத்திலிருந்து நாங்கள் எதுவும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் அது நல்லதுதான். அதனால் எந்த பிர்ச்னையும் இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.