Heavy rain : உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

கர்நாடகா: Heavy rain in Karnataka: கர்நாடகாவில் கடந்த 7 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான உடுப்பி, தென் கன்னடம் மற்றும் வட‌ கன்னடம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கலபுர்கி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் கன்னடம், வட கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூர், ஷிவமொக்கா, குடகு மற்றும் ஹாசன் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான தென் கன்னடம், வட‌ கன்னடம் மற்றும் உடுப்பியில் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதிக வெப்பநிலைக்கு பெயர் பெற்ற கலபுர்கி மலைவாசஸ்தலமாக மாறியுள்ளது. கலபுர்கி மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார். பெலகாவி மற்றும் பிதார் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன‌மழையால் வட கன்னடம் மாவட்டத்தில் உள்ள காளி ஆற்றின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. தண்டேலி நகரின் புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் ஏற்கனவே தண்ணீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

124.80 அடி உயரமுள்ள கேஆர்எஸ் அணைக்கு 31,732 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் இரவு 8 மணி அளவில் நீர்மட்டத்தின் அளவு 122.05 அடியாக உள்ளது. 13,511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நள்ளிரவுக்குள் அணை நிரம்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரமுள்ள கபினி அணைக்கு நீர் வரத்து 15,727 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் இரவு 8 மணி அளவில் நீர்மட்டத்தின் அளவு 2281.33 கனஅடியாக உள்ளது. 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வரதா, குமுத்வதி, துங்கபத்ரா ஆறுகள் அதிகபட்சமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடலோர மாவட்டமான உடுப்பியில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.