Basil Rajapaksa: இலங்கை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

Sri Lanka president's brother, Basil Rajapaksa, resigns from parliament
இலங்கை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

Basil Rajapaksa: இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார்.

இது குறித்து பசில் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். இனிவரும் காலங்களில் எந்த அரசு பதவியையும் வகிக்கப் போவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சே ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியில் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவிர்த்து வருகிறது. பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sri Lanka president’s brother, Basil Rajapaksa, resigns from parliament

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை டாக்டர்கள் கிளினிக் வைக்க தடை – தெலுங்கானா அரசு