Electricity in Pakistan: பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு

Markets to close down across Pakistan at 8:30 pm to save electricity
பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு

Electricity in Pakistan: பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாத்தில் நடக்கும் திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை.

ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது. 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: TANCET 2022: டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியீடு