Queen Elizabeth : செப். 19 இல் இங்கிலாந்து மகாராணியின் இறுதிச் சடங்கு

லண்டன்: Sep.19th Funeral of the Queen of England ; மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உடலுக்கு செப். 19 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் (Queen Elizabeth ) உடல் ஸ்காட்லாந்து பால்மரால் அரண்மனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியில் அவரது உடலுக்கு திரளாக கூடியிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர். மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு ஸ்காட்லாந்தின் கொடி போர்த்தப்பட்டு, போலீசாரின் பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில் இளவரசி ஆன் பயணம் செய்தார். இன்று பிற்பகல் வரை வழியில் உள்ள எடின்பர்கில் உள்ள ஹாலிரூட் ஹவுஸ் மாளிகையில் அரச குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள புனித ஜைல்ஸ் தேவாலயத்தில் (St. Giles’ Church)அரசர் சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து மகாராணியில் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இறுதிச் சடங்கிற்கான நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த மகாராணியின் உடல் இந்த வார இறுதியில் லண்டனுக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட் மின்ஸ்டர் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக 4 நாட்கள் மகாராணியின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர் எலிசபெத் உடலுக்கு செப். 19 ஆம் தேதி காலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. மணியளவில் நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே லண்டனில் உள்ள அரண்மனைகளில் உள்ள வாயில்களில் பொதுமக்கள் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர்க் கொத்துகளை வைத்து சென்ற வண்ணம் உள்ளனர். இளவரசர் வில்லியம், இளவரசி கேத் (Prince William, Princess Kate), இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் விண்ட்சர் அரண்மையின் வாயிலில் கூடியிருந்த பொதுமக்களிடம் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டனர். மகாராணி எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் அரண்மனைகள் மற்றும் அரசு அலுவல கட்டடங்களில் அந்நாட்டின் தேசியக் கொடுகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. புதிய அரசராக சார்லஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இன்று நாடாளுமன்றத்திற்கு மனைவி கமிலாவுடன் செல்லும் அரசர் சார்லஸ், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றனர்.