Son who died in front of his mother: டூவீலர் மீது லாரி மோதல்; தாய் கண் முன்னே துடிதுடித்து இறந்த மகன்

திருவள்ளூர்: Son who died in front of his mother: பொன்னேரி அருகே தாய் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜாதோப்பு தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு பால சூர்யா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு பிறந்தநாளில் விழாவிற்காக பால சூரியா தனது தாயுடன் டூவீரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது.

இதில் நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பாலசூர்யா, லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து தாய் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பால சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு:
திருவள்ளூர் மாவட்டம், ஏகாட்டூர், அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன், 62. இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தூய்மை பணியாளராக பணியாற்றினார்.

நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்து , பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே துப்புரவு பணி செய்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், அவரை ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்க நகை மோசடியில் ஜோதிடர் கைது:
திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இந் நிலையில், அவரிடம் ஜோதிடம் பார்த்துக் கொள்ள பள்ளிப்பட்டு சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவீந்திரபாபு கடந்த சில தினங்களுக்கு முன்று சென்றுள்ளார். வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க சுமங்களி தங்க தாலி சரடு அணிவித்து லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜோதிடர் பேச்சு நம்பி அவர் மனைவி அணிந்துருந்த மூன்று சவரன் தங்க தாலி சரடு கொண்டு சென்று ஜோதிடரிடம் வழங்கியுள்ளார். தாலி சரடு லட்சுமி தேவி படத்திற்கு அணிவித்து இரண்டு நாட்கள் பூஜை செய்து விட்டு தருவதாக கூறி அனுப்பிவைத்துள்ளார். இரண்டு நாள் கடந்த நிலையில் ஜோதிட நிலையம் திறக்கப்பாடதால் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோபால் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதிட நிலையத்தில் பொருட்கள் எடுத்துக் கொண்டு சென்ற போது பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்று சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டுபாகூர் ஜோதிடரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.