Restrictions On Chinese Travelers Are Right: சீனப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்

ஜெனிவா: சீனாவில் தற்போது உருமாறிய கொரோனா (Restrictions On Chinese Travelers Are Right) வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மீண்டும் கொரோனா பரவுகிறதா என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவுவதை தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த வகையில் சீனாவில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.
இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, சீனாவில் வைரஸ் தொற்று அதிகரித்திருக்கிறது. இன்னும் அங்கிருந்து ஒரு முழுமையான தகவல்கள் இல்லை. பல நாடுகள் தங்களின் குடிமக்களைப் பாதுகாக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. கட்டுப்பாடுகள் சரியானவைதான் என்றார்.