Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 22ம் தேதி (Today Rasi Palan) வெள்ளிக்கிழமை. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இன்று அதிகாலை 2.56 மணி வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று முழுவதும் திருவாதிரை. அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

மேஷம்: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். உறவினர்கள் மூலம் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

ரிஷபம்: அனுகூலமானநாள். குடும்பத்தினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் செலவுகள் ஏற்படலாம். யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: புதிய முயற்சிகள் சாதகமாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவுகள் மூலம் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும்.

கடகம்: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவுகளால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்: சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு, வரலாம் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.

கன்னி: குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

துலாம்: தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். இறைவழிபாடு முக்கியம்.

தனுசு: வீட்டிலும் வெளியிலும் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் நற்பலன்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்பம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் மகிழ்ச்சி தரும் நற்செய்தி தேடி வரும்.

மீனம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யம் அதிகரிக்கும்.