New President of Sri Lanka : இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

கொழும்பு: Ranil Wickremesinghe is the new President of Sri Lanka : இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகை இட்டனர். இதனைத் தொடர்ந்து அதிபராக பதவி வகித்த கோத்தபய ராஜபட்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற பிறகு அவர் அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் (Parliament) முடிவு செய்து, தேர்வு செய்வதற்கான‌ வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதிபர் போட்டியில் அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எம்.பிக்கள் டல்லஸ் அழகப் பெருமாள், அனுரா குமாரா ஆகியோர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இதில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும் (134 votes), டல்லஸ் அழகப் பெருமாள் 82 வாக்குகளும், அனுரா குமாரா 3 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே (Ranil Wickremesinghe) முதல் முறையாக இலங்கையின் அதிபராகி உள்ளார். இவர் அந்நாட்டின் 8-வது அதிபராவார். 225 எம்பிகள் உள்ள நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்பியாக உள்ள ரணில் விக்ரமசிங்கே அதிபராகி உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் (Sri Lanka)அதிபராகி உள்ள நிலையில். அவர் ராஜபட்சேவின் குடும்பத்தினரை பாதுகாக்கவே அதிபராகி உள்ளதாக கருதி, அந்நாட்டு மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.