Actress Nithya Menon marriage soon: நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம்?

சென்னை: Actress Nithya Menon marriage soon: நடிகை நித்யா மேனனுக்கு மலையாள ஹீரோவுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நடிகை நித்யா மேனன் கடந்த 1988ம் ஆண்டு கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (Manipal University) இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் (Pune Film College) ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

நடிகை நித்யா மேனன் திரைப்பட நடிகையும், பின்னணிப் பாடகியும் ஆவார். குண்டே ஜாரி, கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படங்களில் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளைப் (Filmfare Award) பெற்றுள்ளார்.

தமிழில் நூற்றெண்பது, வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், மெர்சல், சைக்கோ (Oh Kaadhal Kanmani, Mersal, Kanchana 2, Irumugan, Mersal, Psycho) படங்களிலும், தெலுங்கில் ஓகே கண்மணி, மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு, கீத கோவிந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவரது கியூட்டான நடிப்பால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ (Tiruchirappalam) படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில வேறு மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

நித்யா மேனன் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகிறது. பிரபல மலையாள கதாநாயன் (Malayalam Actor) ஒருவரை நித்யா மேனன் திருமணம் (Wedding) முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நித்யா மேனனிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.