Lady Murder Case : மாமியாரைக் கொலை செய்த மருமகனை போலீஸார் கைது

பெங்களூரு : Police arrested the son-in-law: மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு மாரத்தள்ளி மஞ்சுநாத்நகரைச் சேர்ந்த காய், கனி வியாபாரம் செய்து வந்தவர் சௌபாக்யா (40). இவரது மகள் பவ்யாஸ்ரீ. இவருக்கும் ஹொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நாகராஜ் மது அருந்தி வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால், அவருக்கும் பவ்யாஸ்ரீக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் கணவருடன் வாழ முடியாது எனக் கூறி பவ்யாஸ்ரீ தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனயடுத்து மாமியார் வீட்டிற்கு வந்து, தனது மனைவியை அனுப்பி வைக்கும்படி பலமுறை கேட்டுள்ளார். இதற்கு சௌபாக்யா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி சௌபாக்யாவிடம் மனைவியை அனுப்பி வைக்குமாறு கூறி உள்ளார்.

இந்த முறையும் சௌபாக்யா மறுக்கவே , இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், இரும்பு கம்பியால் தாக்கியதில் (striking with an iron rod) படுகாயமடைந்த சௌபாக்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் நாகராஜை பிடிக்க முயன்றப்போது அவர் தப்பியோடி உள்ளார்.

இது குறித்து வழக்கு பதிந்த எச்.ஏ.எல் போலீஸார் (HAL Police) நாகராஜை கைது செய்தனர். மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் கொலை செய்து, கைதாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.