NCPCR inspect Kallakurichi: கள்ளக்குறிச்சியில் வரும் 27ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

கள்ளக்குறிச்சி: National Commission for Protection of Child Rights will inspect Kallakurichi: கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார். ஆனால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நீதி விசாரணை கோரி இளைஞர்கள் திரண்டு (Kallakurichi Riots) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் (Police Vehicles) அடித்து நொறுக்கப்பட்டன. இது மிகப் பெரிய கலவரமாக மாறி, பள்ளி வளாகத்தில் உள்ள பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். மேலும் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டுள்ளது. மேலும் கலவரம் தொடர்பாகவும் 300க்கும் மேற்பட்டோரை கைது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) விசாரணை நடத்த உள்ளது. அதன் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.